"நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசுக்கு எதிராக போராடுவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை" -லாலு பிரசாத்
உயிரை விடும் நிலைக்கு வந்தாலும், பீகாரில், நிதிஷ் குமார் தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டன் என ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் கூறியுள்ளார்.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்று 3 ஆண்டுகளை ராஞ்சி சிறையில் கழித்த பிறகு அவர் ஜாமினில் வெளி வந்துள்ளார். கட்சியின் 25 ஆம் ஆண்டு தினத்தை ஒட்டிய தமது பேச்சில், தாம் சிறையில் இருந்த போது. தமது மகனும் பீகார் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கட்சியை சிறப்பாக வழிநடத்தியதாக அவர் பாராட்டினார்.
உடல் நலம் குன்றியுள்ள லாலு பிரசாத் டெல்லியில் உள்ள மகளின் வீட்டில் தங்கி உள்ளார். விரைவில் பாட்னவுக்கு வந்து தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.
Comments